கடிதம் – 3

August 16, 2014 0 Comments

கடிதம் – 3

ஸ்ரீமத்யை விஷ்ணு சித்தார்ய மனோ நந்தன ஹேதவே!!

நந்த நந்தன ஸீந்தர்யை கோதாயை நித்ய மங்களம்!!!

 வாழ்க வளமுடன்

அனைவருக்கும் வணக்கம்…

என் வாழ்க்கையில் வாஸ்துவினால் கிடைத்த சந்தோஷங்கள் என்று நிறைய உண்டு…

அதேபோல் அதற்கு சரிசமமாக கஷ்டங்களும் நிறைய உண்டு….

கஷ்டம் – 1

அதிலும் குறிப்பாக என்னை வாஸ்துவிற்காக சந்தித்த பிறகு என் மனதிற்கு பிடித்த சில மனிதர்களுக்கு ஏற்படும் கஷ்டங்கள் என் மனதில் எப்போதும் ஆறா வடுவையும், வலியையும் கொடுத்து கொண்டே இருக்கின்றது. அப்படி என் வாழ்க்கையில் ஏற்பட்ட 3 மறக்கவேமுடியாத சம்பவங்கள்

  • தஞ்சாவூர் வல்லத்தை சேர்ந்த என் ஆருயிர் சகோதரி சித்ரா புவனேசன் அவர்களின் ஒரே மகன் விமல் – ன் விபத்து மரணம்
  • வளசரவாக்கம் சகோதரி தனலக்ஷ்மி – யின் திடீர் மரணம்
  • பாப்பிரெட்டி துரிஞ்சிபட்டி திரு.குமார் அவர்களின் மனைவி சங்கீதா மற்றும் 2 குழந்தைகளின் தற்கொலை மரணம்

– என்னை பார்க்கும் போதெல்லாம் திருமதி.சித்ரா அவர்கள் என்னை தம்பியாகவும், திருமதி.சங்கீதா அவர்கள் என்னை அண்ணனாகவும் தான் பாவித்து நடப்பார்கள்… அவர்களுக்கு இப்படி ஒரு கஷ்டமா? இப்படி ஒரு முடிவா? என்று நினைக்கின்ற போது வாஸ்து துறைக்கே நாம் வந்தது தவறு என்று நினைப்பதுண்டு… ஆண்டாள் சத்தியமாக இவர்களை நினைத்து நான் தூங்க முடியாத நாட்கள் என சில நாட்கள் இன்றும் உண்டு… இவர்கள் பட்ட / படும் கஷ்டத்தை நினைத்தால் சாப்பிடவே முடியாது…. இப்போது கூட பசி இருந்தும் சாப்பிட பிடிக்காமல் தான் இக்கடிதத்தை எழுதுகின்றேன்….

கஷ்டம் – 2

மேலும் நான் வாஸ்து பார்க்க சென்ற இடங்களில்

  • நிறைய ஏமாற்றப்பட்டு இருக்கின்றேன்
  • நிறைய அசிங்கப்பட்டு இருக்கின்றேன்
  • நிறைய அவமானப்படுத்தப்பட்டு இருக்கின்றேன்
  • நிறைய கஷ்டப்படுத்தபட்டு இருக்கின்றேன்
  • நிறைய காயப்படுத்தபட்டு இருக்கின்றேன்
  • நிறைய கேவலப்படுத்தபட்டு இருக்கின்றேன்

ஆனால் இந்த கஷ்டங்களையெல்லாம் சகித்து கொண்டு நான் வாஸ்து பார்த்தது / பார்த்து கொண்டு இருப்பது ஏன் என்றால்

  • கண்டிப்பாக அது பணத்திற்காக அல்ல….
  • கண்டிப்பாக அது பொருளுக்காக அல்ல…
  • கண்டிப்பாக அது புகழுக்காக அல்ல…

இது எதுவும் இல்லை என்றால் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கின்ற பொது நலமா என்று கேட்டீர்கள் என்றால் அதற்கும் என் பதில் இல்லை என்பது தான்… இது எல்லாவற்றையும் விட பெரிய காரணம் ஒன்று உண்டு என்றால் அது என் சுய நலம் தான் என்று கூறுவேன்…      அதை புரிந்து கொள்ள ஒரு சின்ன பிளாஷ் பேக்….

  1. நான், என் தாய், தந்தை கஷ்டத்தின் உச்சகட்டத்தில் அனாதையாக நின்ற போது என் நண்பர்கள் தவிர வேறு யாரும் எங்கள் பக்கத்தில் உதவும் நிலையில் இல்லை… உதவகூடிய எண்ணம் கொண்ட சில உறவினர்களுக்கும் எங்களுக்கு உதவும் அளவிற்கு பொருளாதார வசதி இல்லை…. கஷ்டத்தின் அடுத்தகட்டம் என்கின்ற நிலையே கிடையாது என்கின்ற அளவிற்கு கஷ்டம். அந்தக் கஷ்டத்தில் இருந்து என்னை மீளவைத்து இன்றைக்கு நான் வாழ்கின்ற சிறந்த வாழ்க்கையின் அடித்தளத்தை அமைத்து கொடுத்தது என்னுயிர் கல்லுரி நண்பர்களான M.இராம்குமார் – USA மற்றும் S.சுகுமார் – USA தான்…
  2. முடிந்து போனான் சொக்கலிங்கம் என்கின்ற நிலையை மாற்றி எந்த முடிவையும் மாற்ற பிறந்தவன் என்கின்ற நிலைக்கு என்னை உயர்த்தி நான் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தத்தை உண்டு பண்ணியவர்கள் இந்த இரண்டு பேர்தான். இந்த இரண்டு பேரும் எனக்கு இடையில் வந்த உறவுகள்…. நான் வளர இப்படிப்பட்ட உறவுகளை மேலும் ஏற்படுத்தி கொள்ளவும், நான் மேலும் வெற்றி பெற எனக்கு நிறைய பேரை தெரிந்து இருக்க வேண்டும் என்கின்ற காரணத்திற்காகவும் தான் வாஸ்துவை தொடங்கினேன்.
  3. பெற்றோருக்கு ஒரே குழந்தையாக பிறந்ததால் அண்ணன் / தம்பி; அக்கா / தங்கை உறவின் ஏக்கத்தை முறியடிப்பதற்காகவும் தான் வாஸ்துவை தொடர்கிறேன்…

இதற்கிடையில் நான் பரிகாரம் விற்காத வாஸ்து நிபுணர் என்பதால் என்னால் TV – நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த முடியாத வகையில் ஏற்பட்ட சிரமங்கள், என்னை கூப்பிட்டு வாஸ்து பார்த்த பின் கூப்பிட்டவர்களால் நான் சொல்லிய குறைகளை சரி செய்ய முடியாத சூழ்நிலைகள் – பின் அதனால் அவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், முத்தாய்ப்பாக ஆண்டாளுக்கு உரிய கோவிலின் தங்க விமான திருப்பணி முடிவுறா சூழ்நிலைகள் என்னை வாஸ்துவே பார்க்க கூடாது… என்கின்ற சூழ்நிலைக்கு தள்ளியது… ஆனால் என்னுடைய பலநாள் கஷ்டம், பலவகையான வருத்தங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு பெரிய சந்தோஷம் சமீபத்தில் கிடைத்தது…

அந்த ஒரே ஒரு சந்தோஷம் – என் வாழ்வையே அர்த்தம் உள்ளதாக ஆக்கிவிட்டது என்று கூட கூறலாம்…

அந்த நிகழ்வு பற்றி அடுத்த கடிதத்தில் விளக்கமாக கூறுகின்றேன்…

 

வாழ்க வளமுடன்

என்றென்றும் அன்புடன்

ஆண்டாள் பி. சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × one =