ஆண்டாள் பி சொக்கலிங்கம்

முனைவர் ஆண்டாள் பி சொக்கலிங்கம் B.E.,M.B.A.,M.Phil.,Ph.d அவர்கள் தமிழ்நாட்டில் புகழ்மிக்க வாஸ்து நிபுணராக கருதப்படுபவர். இவர் ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து & ஸ்ரீ ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவனர் மற்றும் இப்போது VHP (வட தமிழ்நாடு) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 1971-ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பிறந்தவர். இவருடைய முப்பாட்டனார் மடத்துக்கடை  சிதம்பரம் பிள்ளை அவர்கள் மிக பெரிய சுதந்திர போராட்ட வீரராவார், இவரது சகோதரர் மடத்துக்கடை சொக்கலிங்கம் பிள்ளை அவர்கள் சுதேசிமித்ரன் மற்றும் தினசரி பத்திரிகையின் நிறுவனர் ஆவார், மடத்துக்கடை சொக்கலிங்கம் பிள்ளை தான் தினமணி பத்திரிகையின் முதல் ஆசிரியர் ஆவார். முனைவர் ஆண்டாள் பி சொக்கலிங்கம் அவர்கள் 1995-ம் ஆண்டு முதல் இன்று வரை வாஸ்துவிற்கும் கோவில்களுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுள்ளார்.

இவரது வாஸ்து குறித்த கருத்துக்கள், பணத்திற்காக விற்கப்படும் பரிகாரப் பொருட்களுக்கும், தேவையில்லாமல் செய்யப்படும் மந்திர, தந்திர வித்தைகளுக்கும் என்றும் அடிப்பணியாது. இவரது வாஸ்து கருத்துகள் எல்லாம் அறிவியலை உட்படுத்தியே இருக்கும் என்பதால், இவரது வாஸ்து கருத்துகள் உண்மையான வாஸ்துவை நம்பும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துவருகிறது.

வாஸ்துவை தவிர்த்து இவர் பல துறைகளிலும், தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார். அதில் மிகவும் முக்கியமானவை கிழ்கண்டவாறு, இவர் லோன்ஸ்டார் என்ற மென்பொருள் நிறுவனத்திற்கு தலைவராகவும்,ஸ்ரீ ஷியாமளா இன்டேன் கேஸ் ஏஜென்சியின்(IOCL – Indane Distributor) நிறுவனத்தலைவராகவும், ஸ்ரீ ஆண்டாள் வாஸ்து மற்றும் ஸ்ரீ கன்சல்டிங் – ன் நிறுவனத்தலைவராகவும் இருந்துவருகிறார்.

மேலும் ஜெயா டிவி, தந்தி டிவி, சங்கரா டிவி, விஜய் டிவி நேரலை ஒளிபரப்பு நிகழ்ச்சிகளின் மூலம் வாஸ்து – ஆன்மீகம் பற்றியும், வாஸ்துவில் உள்ள அறிவியல் சார்ந்த உண்மைகளை பற்றியும், ஆன்மீகத்தில் உள்ள அறிவியல் பற்றியும் நேயர்களுடன் பகிர்ந்து வந்துள்ளார்.