வாஸ்துப்படி அஸ்திவாரம் / கடைக்கால் தோண்டும் விதம்?

  1. மனை சதுரமாகவோ அல்லது நீண்ட சதுரமாகவோ தான் இருக்க வேண்டும் (நான்கு மூலையும் மூலைமட்டத்திற்கு),
  2. நிலத்தில் நைருதி மூலை உயரமாகவும்,
  3. அக்னி மூலை நைருதியை விட பள்ளமாகவும்,
  4. வாயு மூலை அக்னி, நைருதியை விட பள்ளமாகவும்,
  5. ஈசானிய மூலை நைருதி, அக்னி, வாயு மூலைகளை விட பள்ளமாகவும் இருக்க வேண்டும் அல்லது இவ்வாறு சரிபடுத்திக்கொள்ளவும்.
  6. நிலம் தெற்கை விட வடக்கில் தாழ்வாகவும் மேற்கை விட கிழக்கில் தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
  7. கேட் வெளிப்பக்கம் திறக்கும்படி அமைக்கக்  கூடாது.
  8. சுப இடத்தில் உள்ள  கேட்டுக்கு எதிராக இணைப்புச் சாலையை அமைக்க வேண்டும்.
  9. உயர்நிலை மேல் நீர்தொட்டியை தென்மேற்கு மூலையில் அமைக்க வேண்டும்.
  10. பூமியைத்தோண்டி அமைக்கப்படும் போர்வெல், கிணறு முதலியவற்றை காலியிடத்தில் வட கிழக்கில் அமைக்கலாம். வேறு திசைகளில் அமைத்து விடக் கூடாது.
  11. துணைக்கட்டிடங்கள் : துணைக் கட்டிடங்களை தெற்கிலும், மேற்கிலும் உள்ள காலியிடங்களில் கட்டிக் கொள்ளலாம். ஆனால் துணைக்கட்டிடத்தின் சுவர் பிரதான கட்டிடத்தின் சுவரைத் தொடக்கூடாது. அதே சமயம் துணைக்கட்டிடத்திற்கு வடக்கிலும், கிழக்கிலும் அதிக காலியிடம் விட்டு கட்ட வேண்டும்.
  12. தெற்கு, மேற்கில் உள்ள காலியிடங்களில் பெரிய உயரமான மரங்களை வளர்க்கலாம்.
  13. ஈசானியத்தில் எதுவும் வளர்க்க கூடாது.
  14. கழிப்பறைகள், குளியல் அறைகள் வாயு மூலைப் பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாம். நைருதி மூலைப்பகுதியில் இவைகளை அமைக்கக் கூடாது. அதே போல் கழிப்பறையை பூமிக்கு கீழ் அமையும்படி அமைக்கக்கூடாது.
  15. கேன்டீன் : வடக்கு மதிற்சுவரிலிருந்து குறைந்தது 4 அடி இடைவெளி விட்டு மேற்கு வாயு மூலைப்பக்கத்தில் சாப்பிடும் கேன்டீனை அமைத்துக் கொள்ளவும்.
  16. ட்ரான்ஸ்பார்மர் / பவர் ஹவுஸ் கிழக்கு, வடக்கு திசையை பார்த்த தொழிற்சாலைகளுக்கு தென்கிழக்கு பகுதியில் ட்ரான்ஸ்பார்மரையும், பவர் ஹவு சையும் அமைக்கலாம். தெற்கு, மேற்கு திசையை பார்த்த தொழிற்சாலையில் வாயு மூலையில் அமைக்கலாம்.
  17. கனமான இயந்திரங்களை நைருதிமூலையில் (தென்மேற்கு) அமைத்துக் கொள்ளலாம்.
    இந்த மூலையில் உயரமான இயந்திரங்களை அமைத்துக் கொள்வது  சிறந்தது.
  18. உயரமான பிளாட்பாரத்தின் மேல் அல்லது திண்ணை அல்லது திண்டின் மீது அமைக்க வேண்டிய இயந்திரங்களை நைருதி மூலையில் அமைக்கவும் . அதன் பிறகு அவ்விடத்திற்கு தெற்கிலோ, மேற்கிலோ பிற இயந்திரங்களை அமைத்துக் கொள்ளலாம்.
  19. பேக்கிங் மேஜை வாயு மூலையில் இருக்கும்படி அமைத்துக் கொள்ளலாம்.
  20. இயந்திரத்தின் எந்த பகுதியோ அல்லது பிளாட்பாரமோ அல்லது வேலை செய்யும் மேஜையோ கிழக்கு, வடக்குச் சுவர்களை தொடவே கூடாது.
  21. தொழிற்சாலைக்குள் அலுவலகக் கட்டிடத்தை நைருதி பகுதியில் அமைத்துக் கொள்ளவும்.
  22. தொழிற் சாலையின் மொத்தத்திற்கு அல்லது எந்த ஒரு கட்டிடத்தின் மையப்பகுதியிலோ அல்லது வடகிழக்கிலோ (ஈசானியத்தில்) இயந்திரத்தையோ, பொருட் ஸ்டாக்குகளையோ வைக்கக்கூடாது.
  23. உயரமான பிளாட்பாரத்தில் அமைக்க வேண்டிய இயந்திரங்களை கிழக்கு, வடக்கு சுவர்  அருகில் அமைக்கக்கூடாது. பள்ளத்தில் வைக்க வேண்டிய இயந்திரங்களை இத்திசையில் அமைத்துக்கொள்ளலாம்.
  24. தலைமை நிர்வாகி அந்த கட்டிடத்தில் அல்லது வேறு அறையில் உட்காரும் போது தென்மேற்கில் உள்ள அறைகளில் உட்கார வேண்டும்.
  25. பூமிக்கடியில் காலி இடத்தில் நல்ல நீர் தேக்கி வைக்க தொட்டிகள் அமைக்க இருந்தால் ஈசானியப் பகுதியில் அமைக்கவும்.
  26. பீரோக்கள், இரும்பு பெட்டிகள் நைருதி மூலையில் வடக்கு அல்லது கிழக்கு பார்த்து பிளாட்பாரத்தின் மேல் வைக்கவும்.
  27. மின்மீட்டர் அல்லது மின் சக்தி ஸ்விட்ச் போர்டு முதலியன தொழிற்சாலையின் அக்னி மூலைப்பக்கம் அல்லது வாயு மூலைப்பக்கம் அமைத்துக் கொள்ளலாம்.
  28. ஜெனரேட்டர், பவர் ஹவுஸ், எலெக்ட்ரிக் உலை, கம்ப்யூட்டர்கள் முதலியவை தொழிற்சாலையின் அக்னி மூலைப்பகுதியில் அமைக்க வேண்டும். வாயு மூலைப்பக்கமும் அமைத்துக் கொள்ளலாம்.
  29. நடுமையப் பகுதியில் கனமான இயந்திரங்களைப் பொருத்தக்கூடாது.
  30. உற்பத்தி செய்த பொருட்களை விற்பனை செய்யும்போது வாயு மூலையில் அல்லது அக்னி மூலைப்பகுதியிலிருந்து வெளியில் அனுப்பினால் நல்ல லாபம் தரும்.
  31. நைருதியில் பிரதான கேட் அமைத்தால் அந்த தொழிற்சாலைக்குள்  தொழிலாளர் பிரச்சனையை அழைத்து வரும்.
  32. விற்பனைக்குரிய பொருட்களை ஈசானியத்தில் குவித்து வைப்பது, உற்பத்தி செலவை அதிகப்படுத்தி நஷ்டத்தை உண்டு பண்ணும்.
  33. அக்னி மூலையில் கிணறு, சம்ப், மலக்கழிவு தொட்டி, போர்வெல் போன்ற பூமிக்கடியில் அமைக்கும் அமைப்புகள் இருக்ககூடாது.
  34. பூமிக்கடியில் கட்டிடம் அமைப்பு : தொழிற்சாலையில் பூமிக்கடியில் கட்டிடம் கட்டுவதற்கு சிலர் விரும்பலாம். கட்டிடப்பகுதியில் கட்டிடம் கட்டும்போது வடகிழக்கில் செல்லார் வரும்படி அமைத்துக் கொள்ளலாம். மொத்த கட்டிடத்திற்கும் பூமிக்கடியில் செல்லார் கட்டிட அமைப்பு அமைக்க கூடாது.
  35. மழை நீர் வாட்டம் மாடியிலும் சரி காலியிடத்திலும் சரி மழை நீர் ஈசானிய மூலைக்கு ஓடும்படி வாட்டம் கொடுக்க வேண்டும். மழைநீர் வடக்குப்பக்கம் சரிபாதிக்கு கிழக்கிலும் கட்டிடத்தின் கிழக்குப்பக்கம் சரிபாதிக்கு வடக்கிலும் வெளியேறும்படி செய்யலாம்.
  36. கழிவு நீர் தொட்டி : தொழிற்சாலை வடக்கு காம்பவுண்டு சுவரின் நீளத்தின் சரி பாதியில் வடமேற்கு பகுதி காலியிடத்தில் செப்டிக்டேங் அமைக்கலாம்.