#இன்றைய_சந்திப்பு:

May 21, 2022 0 Comments

#இன்றைய_சந்திப்பு:
ஆட்சி கட்டிலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் என்னிடம் எப்போதும் ஒரே மாதிரியாக சொக்கு என்று அழைத்து பாசத்தோடு பழக கூடிய முன்னாள் அமைச்சரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆன என் அன்பு அக்கா திருமதி கோகுல இந்திரா அவர்களை சிறிய இடைவெளிக்குப் பிறகு இன்று திருக்கோஷ்டியூரில் சந்தித்து உரையாடியபோது எடுத்த புகைப்படம் இது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க விமானத் திருப்பணிக்கு முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அம்மா அவர்களின் உதவியாளர் திரு பூங்குன்றன் அவர்களுடைய பங்கு மகத்தானது என்பது ஒருபுறம் இருந்தாலும் அக்கா கோகுல இந்திரா போன்றவர்கள் ஆண்டாள் திருப்பணிக்கு செய்த உதவியையும் மறந்து கடந்து சென்று விட முடியாது…
மீண்டும் ஒருமுறை அதற்காக அக்காவிடம் நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் பராளுமன்ற உறுப்பினராக நீங்கள் தேர்வு பெற்ற பிறகு நான் உங்களை திருக்கோஷ்டியூரில் சந்திப்பேன் என்று வாழ்த்தும் கூறிவிட்டு விடைபெற்றபோது மனசு சற்று லேசாக கனம் குறைந்து இருந்தது.
அதற்கு ஒரே காரணம் நன்றியை திரும்பத் திரும்ப சொல்வதனால் தான் என்பதே உண்மை.
நன்றியுடன் தேரை வடம் பிடிக்க நகர்ந்தேன்.
உடன் மண்ணின் மைந்தர்
திரு. ஏவி நாகராஜன் அண்ணன் அவர்கள்.
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =