#சின்ன_விஷயம்_பெரிய_மாற்றம்:

July 19, 2022 0 Comments

அமெரிக்க கப்பற்படையில்
மிகப் பெரிய பதவி வகித்து
ஓய்வு பெற்ற ஒருவர்
நான் கற்ற பாடம் என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதியுள்ளார்
அவர் கப்பற்படையில் சிறிய
பதவியில் இருந்த காலம் அது
நடுக்கடலில் இருந்த கப்பலில்
ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது
வேலைப்பளு அதிகம் இருந்த
ஒரு நாள் வேறு சில கூடுதல்
பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை
நேராக தன் உயரதிகாரியான
கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தியிருக்கிறார்
முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை
இப்போது கூடுதல் வேலை
வேறு தருகிறீர்கள்
எனக்கு பிரச்சினைக்கு
மேல் பிரச்சினை (problem) தருகிறீர்களே? எப்படி என்னால்
வேலை பார்க்க முடியும்?
என்கிற ரீதியில் சுமார்
கால் மணி நேரம் விடாமல்
பொரிந்து தள்ளியிருக்கிறார்
அவர் பேசியதில்
பிரச்சினை என்கிற சொல்
பல முறை உபயோகப்படுத்தப் பட்டிருந்தது என்பதை கூர்ந்து
கவனித்து கொண்ட கேப்டன் எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டபின் அமைதியாகச் சொன்னாராம்
நீ பேசும்போது பிரச்சினை
என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய்
பிரச்சினை என்றால்
என்ன என்று உனக்குத் தெரியுமா?
உனக்கு முதுகுத்தண்டு
உடைந்து போய் படுத்த
படுக்கையாய் இருக்கிறாய்
அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை
உன் வீடு எரிந்துபோய்
இருந்து அதில் நீ எல்லாவற்றையும்
இழந்து நீ நடுத்தெருவில் நின்றால்
அது பிரச்சினை
ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும்
அல்லது சரி செய்யவே முடியாது
என்கிற வகையில் வருவது
மட்டுமே பிரச்சினை
இதுபோன்ற பிரச்சினைகள்
மனிதனின் வாழ்க்கையில்
ஓரிரண்டாண்டு வரலாம்
வராமலும் இருக்கலாம்
மற்றபடி நீ பிரச்சினை
என்ற பெயரில் சொல்கின்ற
எல்லாமே அசௌகரியங்கள் மட்டுமே
இதுபோன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும்
அந்தந்தச் சமயத்தில்
இவை பெரிதாகத் தோன்றும்
ஆனால்
மணிக்கணக்கிலோ
நாட்கணக்கிலோ
இவை சமாளிக்கப்பட்டு
மறக்கப்படக் கூடியவை
பின்னாளில் யோசித்துப்
பார்த்தால் அவை அற்ப விஷயங்களாகத் தோன்றும்
இப்போது ஆத்திரப்படும்
உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில்
இது அவ்வளவு பெரிய
விஷயமாய் தோன்றாது
நான் சொல்வதை நன்றாக
நினைவு வைத்துக்கொள்
நமது வாழ்க்கை முழுவதும்
எல்லா கட்டங்களிலும் இது போன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும்
இதற்கெல்லாம் பிரச்சினை
என்ற பெயரிட்டு வாழ்க்கையை பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது
என்று கேப்டன் சொன்னது எனக்கு
மிகப் பெரிய பாடமாக இருந்தது என்பதால் அன்றிலிருந்து நான்
எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும்போதெல்லாம்
அது உண்மையான பிரச்சினையா இல்லை அப்போதைய அசௌகரியமா
என்று என்னையே
கேட்டுக்கொள்ள ஆரம்பித்தேன்
நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான்
அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு
பெரிய விஷயங்கள் அல்ல
என்றும் எனக்கு புரிய ஆரம்பித்தது
கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது
என்று தன் அனுபவத்தை புத்தகத்தில் எழுத்துக்களாக வடித்திருப்பார்.
இதைப் பின்பற்றும் பட்சத்திலே
சின்ன சின்ன விஷயங்களில் நாம் கொண்டுவரும் மாற்றங்கள்
நம்முடைய வாழ்க்கையில் பெரிய இடத்தை அடைய வழி கொடுக்கும் என்பதை நீங்கள் கண்கூடாக உணர்வீர்கள்
நாமும் அசௌகரியங்கள் எது
பிரச்சினை எது என்று கண்டறிந்து
வாழ்வாங்கு வாழ்வோம்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =