*#கசக்கும்_உண்மைகள்..*

July 28, 2022 0 Comments

*1.* கும்பிடும் வரை கடவுள்;
*திருட்டுப் போனால் சிலை…!*
*(ஒன்னும் சொல்றதுக்கு இல்லை)*
*2.* எந்த பூச்சிகள் இறந்தாலும் எறும்புகளே *அதை இறுதி ஊர்வலமாய் எடுத்து செல்கிறது..!*
*(மிகச் சிறியவையாக இருந்தாலும் ஞானம் அதிகமாக இருக்கிறது இந்த எறும்புகளுக்கு தான்)*
*3.* தெருவில் குப்பை போடுகிறவனை மரியாதையாகவும்
*அதை பொறுக்கி சுத்தம் செய்பவனை கேவலமாக பார்க்கும் சமுதாயம் உள்ளவரை நாடு சுத்தம் ஆகாது…!*
*(ஆகவே ஆகாது…sure)*
*4.* ஒரு மெழுகுவர்த்தியின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாதது
*ஒரு தீ குச்சியின் மரணம்..!*
*(மரணம் ஒரு முடிவு அல்ல… !)*
*5.* வேலைக்குப் போகிறவர்களின் திங்கட் கிழமையை விட
*வேலை கிடைக்காதவர்களின் திங்கட் கிழமைகள் கொடூரமானவை…!*
*(நிதர்சனமான உண்மை)*
*6.* இவன் என்ன நினைப்பான் அவன் என்ன நினைப்பான்னு நினைச்சே வாழ்றோம். *ஆனா உண்மையில ஒருத்தனும் நம்மளைப் பத்தி நினைக்கிறதேயில்ல என்பதுதான் மிகப்பெரிய உண்மை..!*
*(எல்லாத்துக்கும் காரணம் இந்த எண்ணங்கள் தான்)*
*7.* இந்த டாக்டர்கள் வசதி இல்லாதவன பாத்து அது சாப்புடு இது சாப்புடுனு சொல்லுவார்கள். *வசதி இருக்கிறவனை பாத்து எதையும் சாப்புடகூடாதுனு சொல்லுவார்கள்.!*
*(எல்லாம் அவன் செயல்)*
*8.* இறுதி வரை வாழ்க்கை இப்படியே இருக்க வேண்டுமே என்ற
கவலை சிலருக்கு,
*இப்படியே இருந்துவிடுமோ என்கிற கவலை சிலருக்கு…!*
*(ஒரு முழம் கூடப்போறதும் இல்லை குறையப் போறதும் இல்லை)*
*9.* மொபைல் போனை முதலில் வைத்திருந்தவர்கள் ஆச்சர்யப்படுத்தினார்கள்.
*இப்போது வைத்திருக்காதவர்கள் ஆச்சர்யப்படுத்துகிறார்கள்…!*
*(யூஸ் பண்ணத் தெரியல.. அவ்ளோதான்)*
*10.* தூக்கம் வராமல் முதலாளி…
*தூங்கி வழியும் வாட்ச்மேன். என்ன ஒரு முரண்பாடு..!*
*(கரன்சி பண்ற வேலை)*
முரண்பாடுகளின் ஒட்டுமொத்த உருவம் தான் மனித வாழ்க்கை
இன்றைய வாழ்க்கை
முரண் அகற்றுவோம்
முரண்பாடு கலைவோம்
வாழ்வோம் வெல்வோம்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − two =