#கொஞ்சம்_கேளுங்களேன்…

November 10, 2022 0 Comments

இசை தெரியாது
பாடிய இந்த தெய்வ குழந்தையையும் எனக்கு தெரியாது.
ஆனால்,
நான் ஆண்டாளை பார்க்கும் போதெல்லாம் ஏற்படும் பரவசம்
இந்த தெய்வக் குழந்தை
பாடுவதை கேட்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படுகின்றது
என்ன ராகம் யார் எழுதியது என்ன தாளம் எதுவும் எனக்கு தெரியாது
இருந்தாலும் மழைக்காலத்தில் இரவு முழுவதும் மழை சோவென்று பெய்து ஓய்ந்த பிறகு புயல் கரையை கடந்த பிறகு விடிய காலை ஐந்தரை மணிக்கு ஒரு சுகந்தமான காற்று வீசுமே அந்த காற்றைப் போல இந்த இசையும் எனக்கு புது சுவாசத்தை கொடுக்கின்றது
நல்ல பாடல்கள் பாடப்படும் போது அதைக் கேட்க தெய்வம் வரும் என்பார்கள்
எனக்கு என்னவோ இங்கு தெய்வமே பாடுவது போல் ஒரு உணர்வு
நீங்களும் கேட்டு மகிழுங்கள்.
இந்த தெய்வக் குழந்தையும் அவர் குடும்பமும் வாழ்வாங்கு வாழ என்னுடைய அன்பான

வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
முனைவர் ஆண்டாள் P சொக்கலிங்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + five =