#மாணவனின்_டைரி_குறிப்பு

July 6, 2022 0 Comments

#மாணவனின்_டைரி_குறிப்பு
பயமாக இருக்கிறது
இன்றைய இளம் தலைமுறையினரின் போக்கு
இன்றைய பெரும்பான்மையான இளைய தலைமுறைக்கு பிடித்த ஒரே பொருள் – செல்ஃபோன்
இன்றைய பெரும்பான்மையான இளைய தலைமுறைக்கு பிடித்த இரண்டு பொழுது போக்கு
சினிமா
கிரிக்கெட்
படிக்காமல் பாஸ்
ஆக வேண்டும்
கஷ்டப்படாமல் வேலை
கிடைக்க வேண்டும்
எவருக்குமே மரியாதை தரக்கூடாது
தனக்கு தெரியாத விஷயம்
எதுவுமே இல்லை என்ற மனநிலை
எல்லாமே உடனே
கிடைக்க வேண்டும்
பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்
பெண்கள் மீது மரியாதையே இல்லை
ஆசிரியர்கள், மூத்தோர்கள்
எல்லாம் புழு பூச்சி மாதிரி
வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை‌
நாட்டு நடப்புகள் குறித்து
ஒன்றுமே தெரியாது
தப்பில்லாமல் தமிழோ,
ஆங்கிலமோ எழுதவும்,
பேசவும் வராது
ஒரு விஷயத்தை
கோர்வையாகச் சொல்ல வராது
யாராவது வீதியில் நின்று விஷம் குடித்துக் கொண்டிருந்தாலும், அதையும் செல்பி எடுத்து சோசியல் மீடியாவில் போட வேண்டும்
பள்ளிச் சீருடையுடன் கூட
டாஸ்மாக் போகிற அளவுக்கு தைரியம்‌‌
இளம் வயதிலேயே வாயை திறந்தாலே கெட்ட வார்த்தை‌
எப்போதும் ஏதாவது ஒரு போதையில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள விரும்புகிற மனநிலை
எதிலும் நிரந்தரமாக நிலை கொள்ளாத அலைபாயும் மனம்
ஜட்டி தெரிய பேண்ட் போட்டு
காண்டாமிருகம் மாதிரி முடிவெட்டி
எவரையும் கண்களைப் பார்த்து
பேச முடியாமல் விநோதமாக வெறித்த பார்வையுடன் நடப்பது
Ttf வாசன் போன்றவர்களை
ரோல் மாடலாக வைத்துக்கொண்டு வேகமாக பைக் ஓட்டுவது
எனவே அனைத்தும் மிகப்பெரிய அபாய சூழல்
இந்த அபாயத்தை சமூகம் இன்னும் முழுமையாக உணரவில்லை
பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓரளவு தான் தெரியும்
பெற்றோர்களின் அளவுக்கு
மீறிய செல்லம் தான்
சகலத்துக்கும் ஒரே காரணம்
தங்களை அறியாமல் அவர்கள் இவர்களின் அனைத்து அடாவடிகளுக்கும் துணை போகிறார்கள்
அவர்கள் பார்க்கிற பிள்ளைகளில்லை இவர்கள்
இவர்கள் உள்ளுக்குள் வேறொரு ஜாம்பவானாக வளர்ந்து கொண்டிருக்கிறார்கள்
பள்ளியில் படிக்கிற போது
தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதில்லை
மேற்சொன்னவை ஏதோ ஆண் பிள்ளைகளுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம்
இது இரு பாலருக்கும் பொருந்தும்
இது காலம்,காலமாக
மூத்தோர் இளையோர்
மீது வைக்கிற குற்றச்சாட்டாக எண்ணிவிடாதீர்கள்..
கடந்த பல வருடங்களில் இப்படி ஒரு கெட்ட, சுய சிந்தனையற்ற, சோம்பலும் அலட்சியமும் கொண்ட தலைமுறையை உலகம் சந்திக்கவே இல்லை.
எதிர்கால வரலாறு.
மறுக்க முடியாத வேதனை தரும் உண்மை
பயமாக இருக்கிறது இன்றைய தலைமுறையின் போக்கு
மாற வேண்டும் அத்தனையும்
மாறும் அத்தனையும் ஒரு நாள்
நிச்சயமாக எனக்கு தெரியும் அனைத்தும் மாறாது ஒரே நாளில்
விவேகானந்தர்கள் அதிகம் தேவைப்படும் நேரம் இது என்பதால்
வருவான் ஒருவன் வருவான்
என்கின்ற நம்பிக்கையில்
அந்த நல்ல நாளை எதிர் நோக்கி காத்திருக்கும் முன்னாள் கெட்ட மாணவன்
என்றும் அன்புடன்
Dr ஆண்டாள் P சொக்கலிங்கம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − four =